கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் தல வரலாறு!

கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன்
            தல வரலாறு!

கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் திருக்கோயிலின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.


 

ஸ்ரீ கோனியம்மன் திருக்கோயில்

 

  • தொழில் நகரமான கோயம்புத்தூரில் ரயில் நிலையத்திற்கு மிகவும் அருகாமையில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கோனியம்மன் திருக்கோயில்.  இத பிரதான ராஜகோபுரம் விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்து இருக்கும். 
  • அருள்மிகு ஸ்ரீ கோனியம்மன் என்கிற பெயர்ப் பலகையினை கொண்டு விளங்கும் இரண்டாவது கோபுரம் அங்கு உள்ளது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த கோபுரத்தின் உச்சியில் 5 கலசங்கள் உள்ளன. 
  • இந்த கோயிலில் இருக்கும் அரச மரத்தில் தொட்டில் கட்டப்பட்டிருக்கும். குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காகக் கட்டப்பட்டுள்ள தொட்டில்கள் அது. பக்தர்கள் வேண்டுகின்ற எத்தனையோ வரங்களை வழங்குகின்ற கோயில்கள் உள்ளன. ஆனால் இந்த கோயில் குழந்தை வரம் தரும் கோயிலாக உள்ளது. 
  • இருளர் இனத்தின் தலைவரான கோவன் என்பவர் கோயிலைக் கட்டினார். இக்கோயிலைக் கட்டிய கோவன் என்பவரது பெயராலேயே இவ்வூருக்கு கோவன்புதூர் என்கிற பெயர் வந்தது. பின் நாட்களில் அதுவே கோயம்புத்தூர் என்று மருவியது. 
  • அன்னைக்கு முதன்முதலாக முன்பு அமைந்த கோயில் சங்கனூர் ஓடைக்கு அருகில் தான் கட்டப்பட்டது. சில காலத்திற்குப் பின்னர் சேரர்கள் போர் தொடுக்கும் அபாயம் இருந்த காரணத்தால், இளங்கோசர் எனும் பழங்குடியின மக்கள் புதியதொரு கோயிலைக் கட்டி கோனியம்மன் விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தனர். 
  • இக்கோயிலை நிர்வகிக்க வழியில்லாத நிலை தோன்றியது. இக்கோயிலின் முக்கியத்தை உணர்ந்து மைசூர் மன்னர் ஒருவர் இதனைப் புதுப்பித்தார். 
  • மகிஷாசுரமர்த்தினி அன்னையின் திருவடியில் ஸ்ரீ கோனியம்மனை அவர் பிரதிஷ்டை செய்தார். அரசமரத்தின் கீழே மிகச்சில இடங்களில் மட்டுமே காட்சி தரும் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் இந்த கோயிலில் எழுந்தருளி இருக்கிறார். இந்த ஸ்ரீ பஞ்சமுக விநாயகருக்கு இருபுறங்களில் நாகர்களின் திருவடிவங்கள் உள்ளன. 
  • நவகிரகங்களின் சன்னதியும் இத்திருக்கோயிலில் சிறப்பாக அமைந்துள்ளது. முதன்முதலாகச் சிறிய கோயில் கட்டப்பட்ட அங்கே தெய்வத்தைப் பிரதிஷ்டை செய்து, சில காலம் கடந்த பின்பு கோயிலைப் புனரமைத்து பெரிதாகக் கட்டி அதிலே புதிய மூலவரின் சிலை பிரதிஷ்டை செய்தனர். 
  • இருந்தாலும் முதன்முதலாகப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆதி விக்ரத்திற்கும் தனி சன்னதி அமைத்து வழிபடுவது ஆலயங்களின் மரபுகளில் ஒன்றாகும். அந்த மரபின் படி இங்கே ஆதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ கோனியம்மனுக்கு இங்குத் தனிச் சன்னதி அமைந்துள்ளது. 
  • இவருக்கு ஆதி கோனியம்மன் என்கிற திருப்பெயரும் உள்ளது. குடும்ப சிக்கல்கள் தீர இங்கே வழிப்பட்டால் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகமாகும்.

  

Comments