கதவு மலைநாதன் கோவில் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அருகே உள்ள கதவு மலைநாதன் சிவன் கோவில் அழகிய தலமாக வருகிறது.

 

கதவு மலைநாதன் கோவில் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி அருகே உள்ள கதவு மலைநாதன் சிவன் கோவில் அழகிய தலமாக வருகிறது.




 

கதவு மலைநாதன் கோவில்

பிரமாண்ட பாறையில் குகை வடிவில் அமைந்திருக்கும் இந்த கோவில் நேரில் காண்போரை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்று விடும். இந்த கோவில் 1300 வருடங்கள் பழமையானதாக கருதப்படுகிறது! இப்போதும் இந்தக் கோவிலில் உள்ள குகைகளில் சித்தர்கள் வாழ்வதாக நம்பப்படுகிறது! மலைச்சரிவில் ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் வண்ணம் இந்த கோவிலுக்கு செல்லும் பாதை அமைந்துள்ளது குறிப்பிட்ட இடத்திற்கு மேல் வாகனங்களில் செல்லஇயலாது!
இந்தப் பாறையின் அமைப்பை பார்க்கும் பொழுது இருபுறமும் கதவு வடிவில் காணப்படுவதால் இந்த கோவில் கதவு மலை நாதன் கோவில் எனப் பெயர் பெற்று விளங்குகிறது.

சிலை வடிவில் சிவன் காட்சி தருவது

லிங்க வடிவமாக அல்லாமல் சிலை வடிவில் சிவன் காட்சி தருவது இந்தக் கோவிலின் தனிச்சிறப்பாகும்!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டான சித்திரை ஒன்று அன்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கால்நடையாக இங்கு வந்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

பௌர்ணமி நாட்களும் இங்கு விசேஷ நாட்களாக உள்ளது. சமீப காலமாக இந்த கோவிலுக்கு சுற்றுலா பயணிகளாக வந்து பக்தர்களாக திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

 

சிவன்மலை கோயில் சிறப்புகள்

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவன் மலை மீது உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

இந்த கோயிலில் உள்ள ஆண்டவர் அப்பகுதியை சுற்றியுள்ளோரின் ஒருவரின் கனவில் தோன்றி ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ஒரு குறிப்பிட்ட பொருளை வைத்து பூஜிக்க வேண்டும் என உத்தரவிடுவார். பக்தர்கள் தங்களின் கனவில் வந்த பொருள் குறித்து கோயில் அர்ச்சகர்களிடம் கூற, அவர்கள் பூ போட்டு பார்த்து வெள்ளைப் பூ வந்தால் அந்த பொருள் ஆண்டவன் பெட்டியில் வைக்கப்படும். அந்த பொருளை பொருத்து, அப்போதுள்ள காலத்தில் சில நிகழ்வுகள் நடக்கும் என்பது நம்பிக்கை.அந்த வகையில் கடந்த ஜனவரி 29ம் தேதி இந்த கோயிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மஞ்சள் வைக்க கோவையைச் சேர்ந்த ஒரு பக்தரின் கனவில் உத்தரவு வந்ததை அடுத்து மஞ்சளுடன் கூடிய தாலி கயிறு வைக்கப்பட்டது.

தமிழ் கடவுள் முருகன் என அழைக்கப்படும் முருகன், தன் வேலாயுதத்தால் பகைவர்களை அழிக்கக்கூடியவர். அப்படிப்பட்ட வேல் சிவன் மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்க பக்தரின் கனவில் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேல் வந்ததன் அர்த்தம் என்ன, தமிழகத்தில் எப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்பதை பார்ப்போம்.

தாண்டிக்குடி  சிவன் கோயில்

தாண்டிக்குடி மலை உச்சியில் அமைந்துள்ள அரசன் கொடை கதவுமலைநாதன் சிவன் கோயிலில் பக்தர்கள் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நடை பயணமாக சென்று வழிபட்டனர்.

தாண்டிக்குடியில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது அரசன் கோடை மலை கிராமம். இதற்கு ரோடு வசதி இல்லாத நிலையில் தமிழ் புத்தாண்டு அன்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். கோயில்களில் சிவன் லிங்கமாக காட்சியளிக்கும் நிலையில் இங்கு சுவாமி சிலையாக காட்சியளிக்கிறார்.

மலைமுகட்டின் சரிவில் அமைந்துள்ள இக்கோயிலின் நடைபாதை, சுவாமி சன்னிதானம் உள்ள பகுதி குகை கோயில் என சரிவான பகுதியில் அமைந்துள்ளது.

இங்குள்ள கிராம மக்கள் 10 ஆண்டுகளுக்கு முன் கோயில் செல்லும் பாதையை சீரமைத்து வழிபாட்டிற்கு உதவி புரிகின்றனர்.

இங்கு வரும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை சுற்றி உள்ள பொதுமக்கள் கவனித்து கொள்கின்றனர்.

தார் ரோடு வசதி இல்லாத நிலையில் மண் ரோட்டில் ஜீப் இயக்கப்படுகின்றன. இருந்த போதும் பக்தர்கள் நடைபயணமாகவே தாண்டிக்குடி, பாச்சலுார், பண்ணைக்காடு உள்ளிட்ட வனப்பகுதி மார்க்கமாக இக்கோயிலை வந்தடைகின்றனர். நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக பல்வேறு பகுதியிலிருந்து மலைப்பகுதியில் குவிந்தனர்.

"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

Comments